திருச்சி அருகே ஸ்வீட் கடை ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி அருகே ஸ்வீட் கடை ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை
X
திருச்சி அருகே ஸ்வீட்கடை சூப்பர்வைசர் தூக்குமாட்டி தற்கொலை போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பஸ் நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களத்தை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடையின் மேல் தளத்திலுள்ள அறைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.

சந்தேகத்தின் பேரில் ஓய்வு அறைக்கு சென்ற கடை ஊழியர், சரவணன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!