துவரங்குறிச்சி அருகே பழமையான சிவன் கோயிலில் சாமி சிலை திருட்டு
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அழகாபுரி கிராமம் பழையபாளையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உள்ளே விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சிவன், பார்வதி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னதிகளில் அதற்கான சிலைகள் உள்ளன.
கோயிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் இன்று காலை 7 மணிக்கு வந்து பார்த்தபோது சண்டிகேஸ்வரர் சாமி சிலையை மட்டும் காணவில்லை. உடனே அவர் கோயில் நிர்வாகிகளான மருங்காபுரி ஜமீன்தாரிடம் தகவல் கொடுத்தார். அவர்கள் கோயிலுக்கு வந்து சாமி சிலைகளை பார்த்தனர். இவற்றில் 3 அடி உயரம் கொண்ட சண்டிகேஸ்வரர் கல்லினால் ஆன சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இது குறித்து துவரங்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu