மணப்பாறையில் இருவேறு இடங்களில் நகை மற்றும் ரொக்கம் திருட்டு

மணப்பாறையில் இருவேறு இடங்களில்  நகை   மற்றும்  ரொக்கம்  திருட்டு
X
மணப்பாறையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் 9.5 பவுன் நகை , ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருவேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவங்களில் ஒன்பதரை சவரன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருடு போனது.

மணப்பாறை அடுத்த வண்ணாங்குளத்துப்பட்டியில் வசித்து வருபவர் கட்டட தொழிலாளி கரும கவுண்டர் மகன் ராஜூ(60). இவர் வழிப்பாட்டிற்காக வியாழக்கிழமை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவு திறந்து கிடப்பபதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கோயிலுக்கு சென்றவர்கள் பாதியிலேயே திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்பதரை சவரன் நகை மற்றும் ரூ.5700 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் ஸ்பார்க் ஆகிவற்றுடன் தடயங்களை சேகரித்தனர்.

அதேபோல், மணப்பாறைபட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் ஜன்னல் கதவை உடைந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த, சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு பெட்டி மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை