வையம்பட்டி அருகே வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

வையம்பட்டி அருகே வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பலி
X
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி அருகே வாகனம் மோதியதில், அரசு பஸ் டிரைவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள தொப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 47). புதுக்கோட்டை அரசு பஸ் டிப்போவில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு, காந்திநகர்- எளமணம் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!