திருச்சி அருகே கார்-லாரி மோதி விபத்து: ஒருவர் பலி -7 பேர் படுகாயம்

திருச்சி அருகே கார்-லாரி மோதி விபத்து:  ஒருவர் பலி -7 பேர் படுகாயம்
X
திருச்சி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்; 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவந்தம்பட்டி விளக்கு என்ற இடத்தில், விபத்துக்குள்ளானது. அந்த காரின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை, அதன் டிரைவர் திடீரென சடன் பிரேக் போட்டுள்ளார்.

இதனால், பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேரை, உடனடியாக மீட்டு அருகே மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில், மதுரை இஸ்மான்புரத்தை சேர்ந்த காமின்பாஷா (வயது 51) என்பவர் உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story