மணப்பாறை அருகே மாண்டவர் மீண்ட சம்பவத்தால் உறவினர்கள் ஆனந்த அதிர்ச்சி
இறந்ததாக கருதப்பட்ட இளைஞர் உயிர்த்தெழுந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணூத்து அருகே உள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிநாயக்கர் (வயது 23). இவர்கடந்த சில தினங்களுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டுசிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி மருத்துவ மனை நிர்வாகம் அறிவுறுத்தி யதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண்டி நாயக்கர் குடும்பத்தினர் அவரைஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வீட்டின் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர், அசைவற்ற நிலையில்இருந்ததால் இறந்து விட்டதாக கருதி, உறவி னர்கள் கதறி அழுதனர்.
மேலும் அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கினர்.இந்த நிலையில் அனைவரின் அழுகுரல் சத்தத்தை கேட்ட வாலிபர் திடீர் என கண்ணைதிறந்து பார்த்தார். இதனை பார்த்த உறவினர்கள் அனைவரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும்அங்கு திரண்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர்.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆண்டி நாயக்கரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்ததாக கருதப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu