மணப்பாறை அருகே பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

மணப்பாறை அருகே பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
X
மணப்பாறை அருகே பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 29). இவர் மணப்பாறையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பாலகருத்தம்பட்டி அருகே சென்ற போது மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!