மணப்பாறை போலீசில் பூசாரி மீது ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக புகார்
மணப்பாறை போலீஸ் நிலையம் (பைல் படம்)
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சியைச் சேர்ந்த எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அந்த குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டன. இந்நிலையில் நரியம்பட்டியை சேர்ந்த பூசாரி ஒருவர் சாமி பார்ப்பதாகவும், குழந்தை பாக்கியத்திற்காக தன்னிடம் பச்சிலை மூலிகை உள்ளதாகவும் கூறினார். அதன்படி நான் நரியம் பட்டிக்கு சென்று சம்மந்தப்பட்ட பூசாரி யிடம் பச்சிலை மூலிகை வாங்கி சாப்பிட்டேன். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் வயிறும் கருத்தரித்தது போல் இருந்தது.
மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்வதாக கூறியபோது சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. மீறி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டால் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். இதனால் மருத்துவ பரிசோதனை. மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் குழந்தை பிறப்பதற்காக மூன்று முறை தேதி கொடுக்கப்பட்ட நிலையில் மூன்று முறையும் தேதி கடந்ததோடு 12 மாதங்கள் ஆகிவிட்ட தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதுவரை ரூ. 2 லட்சம் செலவு செய்துள்ளேன்.
ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu