துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டு தர மருங்காபுரி வட்டாட்சியரிடம் மனு
நிலம் மாதிரி படம்
மணப்பாறை:
துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டு தர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டு தர மருங்காபுரி வட்டாட்சியரிடம் மனுவிஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டு தர மருங்காபுரி வட்டாட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் பரமசிவம் பெயரில் அப்பகுதியினை சேர்ந்த பொதுமக்கள், இந்து சமய அமைப்புகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், துவரங்குறிச்சியில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சர்வே எண் 200-ல் (டீ.டி.எண்.1772) சுமார் 4 ஏக்கர் நிலம் வடகுரிக்கி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான தேவதாயம் நிலம் உள்ளது என்றும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நில அளவையின் போது அவற்றில் சில பகுதிகள் தனிநபர்கள் பெயரில் பட்டா மாறுதல் பெற்று தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதே பகுதியில் சர்வே எண்.196-ல் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளமும் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், அவற்றை மீட்டு தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயபிரகாசம், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், நிலத்தின் வகைப்பாடுகள் அறிந்தும், வட்டாட்சியரிடம் கலந்து ஆலோசித்தும், மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu