/* */

குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி உயிரிழப்பு

மணப்பாறை அருகே குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி உயிரிழப்பு
X

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஸ்ரீரங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் போதும்பொண்ணு (வயது 19). 12-ம் வகுப்பு முடித்த இவர், தற்போது பி.எஸ்சி. நர்சிங் சேர்ந்துள்ளார். நேற்று அந்த பகுதியில் உள்ள குளத்தில் தன்னுடைய தோழிகளுடன் போதும்பொண்ணு குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கியதை கண்ட போதும்பொண்ணு உடனே அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றி வெளியே தள்ளிய போதும்பொண்ணு தான் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார்.

உடனே, தோழிகள் கூக்குரலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து நீரில் மூழ்கிய போதும்பொண்ணை மீட்டு வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த வளநாடு போலீசார் போதும்பொண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்த நர்சிங் மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 Jan 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...