காவிரி குடிநீர் குழாய் குதிக்கும் பணியில் வடமாநில தொழிலாளி சாவு
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து சிவகங்கை நோக்கி காவிரி குடிநீர் கொண்டு செல்வதற்கு பிரமாண்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பெரியமணப்பட்டி அருகே குழாய் பதிக்கும் பணியில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கவுதம் சவுகான் (வயது 30) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அவர் மேலே நின்று பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக குழியில் தவறி விழுந்தார். அப்போது அவரது தலைப்பகுதி குழாய் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை சக தொழிலாளர் கள் மீட்டு சரக்கு வேனில் ஏற்றி அங்கும், இங்குமாக சுற்றியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் கவுதம் சவுகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu