வையம்பட்டி அருகே சுங்கச்சாவடியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது

வையம்பட்டி அருகே சுங்கச்சாவடியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது
X
வையம்பட்டி அருகே சுங்கச்சாவடியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் காரில் வந்தவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி சுங்கச்சாவடி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகிகளான மணப்பாறையைச் சேர்ந்த செந்தில் தீபக் (வயது 47), கொட்டப்பட்டியைச் சேர்ந்த அயோத்தி கண்ணன் (47), வத்த மணியாரம் பட்டியைச் சேர்ந்த மருதை முத்து (45), நவீன்குமார் (19), உதயகுமார் (51) ஆகிய 5 பேரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இதே போல் பா.ஜ.க. நிர்வாகி சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில் சுங்கச்சாவடி மேலாளர் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சார்லின் தாமஸ்ராஜ் (35), ஸ்டீபன்பாபு (33), சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த இளங்கோ (33), அருள் சேசு ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!