ஹிந்தியில் பேசியதால் கொலை: போலீசாரிடம் பிடிபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

ஹிந்தியில் பேசியதால் கொலை: போலீசாரிடம் பிடிபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
X

கைது செய்யப்பட்ட சவரிராஜ்.

துவரங்குறிச்சி அருகே நடந்த கொலை சம்பவத்தில் கைதானவர் ஹிந்தியில் பேசியதால் கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த முக்கண் பாலம் என்ற இடத்தில் கடந்த 11-ஆம் தேதி ஆதி சொக்கநாதர் கோவில் முன் மண்டபத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முக்கண் பாலம் ஆதிசொக்கநாதர் கோயில் முன் மண்டபத்தில் இறந்து கிடந்த அவரை கொலை செய்த நபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர் துவரங்குறிச்சி கிளாரா நகரைச் சேர்ந்த சவரிராஜ் (வயது 41) என்பதும், அவர்தான் அந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட நபர் வைத்திருந்த சாக்குப் பையை எடுத்து அதில் உள்ள பொருட்களை தான் பார்த்ததாகவும், அதற்கு அவர் இந்தியில் பேசியுள்ளார். அவரின் பொருளை எடுத்தது தொடர்பாக போலீசாரிடம் கூறி விடுவார் என்று எண்ணி அங்கிருந்த கம்பி மற்றும் உளியால் அடித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி ஹிந்தி பேசும் நபர்களை கண்டால் அவர் தொடர்ந்து கோபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை திட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story