மணப்பாறை நகர்மன்ற அ.தி.மு.க. தலைவர் பதவிக்கு வந்தது ஆபத்து

மணப்பாறை நகர்மன்ற அ.தி.மு.க. தலைவர் பதவிக்கு வந்தது ஆபத்து
X

அமைச்சர் அன்பில் மகஷே்பொய்யாமொழி முன்னிலையில் மணப்பாறை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

2 பேர் கட்சி திமுகவிற்கு தாவியதால் மணப்பாறை நகர்மன்ற அ.தி.மு.க. தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

மணப்பாறை நகர மன்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்லம்மாள், 13வது வார்டு உறுப்பினர் வாணி ஆகிய இருவரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மணப்பாறை நகரக் கழகச் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான கீதா மைக்கேல்ராஜ் உடன் இருந்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து நகர்மன்றங்களில் மணப்பாறை நகராட்சியில் மட்டுமே அ.தி.மு.க. தலைவர் பதவியில் உள்ளது.அந்த கட்சியை சேர்ந்த சுதா பாஸ்கரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு தாவி இருப்பதால் அ.தி.மு.க. தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. விரைவில் நகர்மன்ற தலைவர் பதவியில் தி.மு.க.சேர்ந்த உறுப்பினர் அமர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story