மணப்பாறையில் எம்.எல்.ஏ.வை சந்தித்த மகளிர் சுய உதவிக் குழுவினர்

மணப்பாறையில் எம்.எல்.ஏ.வை சந்தித்த மகளிர் சுய உதவிக் குழுவினர்
X

மணப்பாறையில் எம்எல்ஏ அப்துல் சமதுவிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா ஊரடங்கில் கடன் தவணைகளை கேட்டு தனியார் நிறுவனங்கள் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தீபா தலைமையில் எம்.எல்.ஏ.அப்துல் சமதுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் மகளிர்களுக்கு மகளிர் கடன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் வழங்கி வருகின்றன. தவணை தொகையை பிரதி மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை வசூல் செய்வது வழக்கம்.

பல மகளிர் குழுவினர் 50 சதவீதம் தவணை பணம் கட்டிய நிலையில் கொரோனா எனும் கொடிய தொற்று ஏற்பட்ட காரணத்தாலும் தமிழக அரசு விடுத்துள்ள முழு ஊரடங்கு காலம் அமலில் உள்ள நிலையில் தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் கம்பெனிகளில் வாங்கிய மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன்களை வசூல் செய்யவேண்டி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஒருமையில் பேசியும். தமிழக அரசு வழங்கிய பணத்தை வைத்து கட்டுங்கள் என்று தினந்தோறும் வீட்டு வாசலில் நின்று கொண்டு திட்டி, மிரட்டி வருகின்றனர்.

இதையடுத்து, செய்வதறியாது இருந்த மகளிர் குழுவினர் ஏற்கனவே மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இன்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதை மகளிர் குழுவினர் சந்தித்து தங்கள் நிலையை கண்ணீர்விட்டு கோரிக்கையாக வைத்தனர். வைத்தனர்.

கோரிக்கையை கேட்ட மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது அவர்கள் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி எடுத்து கூறி கடன் தவணைக்கும், மேற்கொண்டு வட்டி விதிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

மகளிர் சுயஉதவிக்குழுவினர் 50க்கும் மேற்ப்பட்டோர் எம்.எல். ஏ. அலுவலகத்திற்கு வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியது.

Next Story