மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
X

மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு ரோட்டரி சங்கம் மூலம் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கினார்.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசூரணக்குடிநீரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.கொரோனா தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கூட இன்னும் ஓரிரு தினங்களில் மக்களை அழைத்து மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். அவை இன்னும் ஓரிரு தினங்களில் வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

எங்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்கள். ஆட்சிக்கு அவர்களால் வர முடியவில்லை. அப்புறம் அவர்கள் எங்களை வாழ்கன்னா சொல்லுவாங்க. அவர்களின் விமர்சனங்களுக்கும் எல்லாம் பதில் சொல்லாமல் செயலில் காட்டுவோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்