கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது

கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் -  ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள். 

மணப்பாறை அருகே, கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குடியரசு தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஒத்தக்கடை பகுதியில் வேல்முருகன் (வயது 19) என்பவர் தோட்டத்தில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!