நூடூல்ஸ் சாப்பிட்டு மாணவர்கள் மயக்கம்; மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்த குளித்தலை எம்எல்ஏ
Karur News,Karur News Today- மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேரில், நலம் விசாரித்தார்.
Karur News,Karur News Today- கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவ மாணவியர் உள்பட 15 பேர் கடந்த 2ம் தேதி அன்று, கூட்டான் சோறு சமைக்க முடிவு செய்து உள்ளனர்.
இதில் கூட்டான் சோறு சமைக்கும் போது ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், விரகு, மளிகை பொருட்கள் என்று தனித்தனியே கொண்டு வந்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது ஆகும். இந்த ஆண்டு கூட்டான் சோறு சமைப்பதில் அரிசிக்கு பதிலாக நூடுல்ஸ் கொண்டு சமைக்க அனைவரும் முடிவு செய்து உள்ளனர். இதனை அடுத்து தோகைமலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பெற்று வந்து உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொண்டு வந்த பொருட்களை கொண்டு சமைக்க தொடங்கி உள்ளனர். இதில் நல்லெண்ணெய் பற்றாக்குறையாக இருந்துள்ளது. இதனால் ஒரு வீட்டில் இருந்து நல்லெண்ணெய் போன்று இருந்த, களைக்கொல்லி பூச்சி மருந்தை, நல்லெண்ணெய் என்று நினைத்து சமையலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
பின்னர் அனைவரும் நூடுல்சை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அதனை தொடர்ந்து அன்று மாலை 4 மணி அளவில் நூடுல்ஸ் சாப்பிட்ட அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதை அறிந்த அப்பகுதியை பொதுமக்கள் 15 பேரையும் மீட்டு, தோகைமலையில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு 15 பேரையும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் அனைருக்கும் தீவிர சிகிச்சை அளித்து கண்காணிக்குமாறு மருத்துவ அலுவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து அங்கு 4 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஹார்லிக்ஸ் உள்ளிட்ட சத்து உணவுகளை வழங்கி நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவர்களிடம் கேட்டறிந்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் தர்மர், தோகைமலை மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் கவிதா ராமசாமி, இளைஞரணி நன்மாறன் உள்பட பலர் உனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu