திருச்சி மாவட்டம் மணப்பாறை காளியம்மன் கோயிலில் சூலாயுதம் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை காளியம்மன் கோயிலில் சூலாயுதம் திருட்டு
X

சூலாயுதம் திருட்டு நடந்த மணப்பாறை காளியம்மன் கோவில்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை காளியம்மன் கோயிலில் சூலாயுதம் திருட்டு போய் இருப்பது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து காளியம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். மேலும் இந்த கோயிலின் முன்புறம் 2 சூலாயுதங்கள் இருந்தன. இந்நிலையில், இன்று காலை ஒரு சூலாயுதம் மட்டுமே இருந்தது கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோயில் செயல் அலுவலர் கண்ணன் வந்து பார்த்தார். தொடர்ந்து, கோயிலில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கும் காட்சிகளை பார்வையிட்டார். திருட்டு போன சூலாயுதம் பித்தளையால் ஆனதாகும். இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!