மணப்பாறை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு முகம்மதியாபுரத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 50). இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் திருச்சிக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்று இருந்த நிலையில் வீட்டின் அருகில் வசிக்கும் உறவினர் இன்று காலையில் பார்த்த போது சுப்பிரமணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நேரில் வந்து பார்த்த பொழுது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 25 பவுன் நகை, 24 பட்டுப்புடவை, ரூ.2 லட்சம் பணமும் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் இவர் வீட்டில் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியின் 10 தோட்டக்களும் கொள்ளை போனது தெரிய வந்தது. இதையடுத்து வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இவரின் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu