மணப்பாறையில் போலீசார், முன்கள பணியாளர்களுக்கு டீ, பிஸ்கட் வழங்கும் ஜேசிஐ

கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3வது நாளாக ஜேசிஐயை சேர்ந்தவர்கள் டீ, பிஸ்கட், தண்ணீர் வழங்கி ஊக்கபடுத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கோவில்பட்டி ரோடு, விராலிமலை ரோடு, திண்டுக்கல் ரோடு, திருச்சி ரோடு என நான்கு எல்லைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு போலீசார், வருவாய்துறையினர், ஊர்காவல்படையினர் மற்றும் துப்புறவு பணியாளர்கள் இணைந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நகரின் அனைத்து தெருக்களிலும் போலீசார் ஆங்காங்கே நிழல் கொடை அமைத்தும் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கினால் கடைகள் அடைக்கப்பட்டு நகரமே வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில், தண்ணீர் மற்றும் டீ குடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் ஜேசிஐ சார்பில் குடிநீர், தேனீர், பிஸ்கட் என வழங்கி ஊக்கப்படுத்துவது பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Tags

Next Story
crop opportunities ai agriculture