நள்ளிரவில் நடந்த ரெய்டு: 1 கோடி பறிமுதல்

நள்ளிரவில் நடந்த  ரெய்டு: 1 கோடி பறிமுதல்
X
அதிமுக வேட்பாளரிடம் ஜேசிபி ஆப்பரேட்டராக உள்ளவரின் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர் ரெய்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஆர்.சந்திரசேகர் தற்போது மூன்றாவது முறையாக இத்தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நேற்று இரவு வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

எம்எல்ஏ விடம் நீண்டகாலமாக ஜேசிபி ஓட்டுனராக பணிபுரியும் வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டில் நடந்த ரெய்டில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 20000 நோட்டுகள் இருந்தன. திருச்சி வருமான வரித்துறை இணைஇயக்குனர் மதன் குமார் தலைமையில் மூன்று கார்களில் வந்திருந்த அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று இடங்களிலும் தனித்தனியே ரெய்டு நடத்தினர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து ஐடி ரெய்டு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் மணப்பாறை எம்எல்ஏ வின் கார் டிரைவர் கொண்டுவந்து பணத்தை கொடுத்ததாக அழகர்சாமி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏவிடம் ஜேசிபி ஆபரேட்டர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் சிக்கியிருப்பது மணப்பாறை தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story