திருச்சி மாட்டு சந்தையில் குதிரை விற்பனையும் தொடங்கியது
திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுசந்தை உலக பிரசித்திப்பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை நண்பகல் வரை நடைபெறும். மாட்டுசந்தையில் திருச்சி, மதுரை, திருநேல்வேலி, ஈரோடு, புதுக்கோட்டை பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கு ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூடுகின்றனர்.
இதில் வாரந்தோறும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அமுலில் உள்ள பொதுமுடகத்தால் சந்தைகள் நடைபெறாமல் வியாபரிகளும், இடைத்தரகர்களும், கால்நடை விவசாயிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அதேபோல் நாட்டு இன குதிரைகளை வளர்ப்போரும் குதிரைகளை விற்பனை செய்ய முடியாமலும், வாங்க முடியாமலும் தவித்து வந்தனர். நாட்டு இன குதிரை வளர்ப்பு ஆர்வலர் பாலசுப்பிரமணியனின் வேண்டுதலுக்கு ஏற்ப தனது மாட்டு சந்தையிலேயே நாட்டு குதிரைகள் வணிகத்திற்கு தனி இடம் ஒதுக்கி, அதற்கான ஏற்பாடுகளை மாட்டு சந்தை குத்தகைத்தாரர் சின்னு(எ)பெரியதம்பி செய்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஆடி 18 நாள் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும் அதே நேரத்தில் நாட்டு குதிரை சந்தையை துவக்கப்பட்டது. இதில் திருச்சி, கரூர், மதுரை, விராலிமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து நாட்டு இன குதிரைகளான கத்தியவார், மார்வார், பெரியசெட்டு, பந்தய குதிரைகள், வளர்ப்பு குதிரைகள் விற்பனைக்கு வந்தது.
இதுபோன்ற நாட்டு குதிரைகள் வணிகம் நடைபெறும் நிலையில், அதன் இனம் காக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் என நாட்டு குதிரை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu