/* */

கொரோனா பீதி, காகித ஆலை மூடக்கோரி ஊழியர்கள் போராட்டம்

மணப்பாறைஅருகே தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் ஆலையை முடிடகோரி தொழிலாளர்கள் போராட்டம். நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் இரண்டாம் அலகு செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இதையறிந்த சில தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆலையின் நிரந்தர பணியாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆலை வாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஆலையை மூட வேண்டும், சம்பளத்துடன் விடுப்பு வழங்கிட வேண்டும், கொரோனாவால் இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்,

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 16 May 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!