சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய மாமனார், மாமியாருக்கு சிறைத்தண்டனை
திருச்சி மாவட்டம் மணப்பாறை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் பழகியுள்ளனர். சிறுவன் சிறுமியை திருமணம் செய்தார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிறுவனின் வீட்டிலேயே சிறுமி இருந்துள்ளார்.
இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி சிறுமி, சிறுவன், அவனின் தந்தை சுப்பிரமணி (வயது 50), தாய் அஞ்சலி (வயது 42) ஆகியோர் வீரப்பூரில் உள்ள கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த பூசாரி சிறுமிக்கு பேய் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார். ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பும்போது சிறுவனின் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுமி ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய சுப்பிரமணி, அஞ்சலி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu