மணப்பாறை அருகே பிச்சம்பட்டி பெரிய குளத்தில் மீன் பிடி திருவிழா

இரண்டு மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் சிறுவன்.
மணப்பாறை அருகே பெரிய குளத்தில் இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டு தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக மீன் பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
சுமார் 13 ஆண்டுகளுக்கு இந்த மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மீன்பிடிக்க திரண்டனர். வலை உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் பலருக்கும் சிக்கிய போதும் பெரிய அளவிலான மீன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பலருக்கும் சிறிய அளவில் தான் மீன்கள் சிக்கியது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு மீன்கள் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
வலையில் சிக்கிய மீன்களை கூடையில் அள்ளிக்கொண்டு கிராம மக்கள் சென்றனர். 13 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்வு பெரிய திருவிழா போல் கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu