துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
X
துவரங்குறிச்சி அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள உப்புலியம்பட்டியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 52). சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலை ஒருவரின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவியும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிளின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசில் 5 பேர் மீது தனிஸ்லாஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story