வையம்பட்டி அருகே சிலிண்டரில் தீப்பிடித்து தந்தை- 2 மகன்கள் படுகாயம்

வையம்பட்டி அருகே சிலிண்டரில் தீப்பிடித்து தந்தை- 2 மகன்கள் படுகாயம்
X
வையம்பட்டி அருகே அடுப்பு பற்ற வைத்தபோது சிலிண்டரில் தீப்பிடித்து தந்தை- 2 மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த அதிகாரிப்பட் டியைச் சேர்ந்தவர் ரவி (வயது 32). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி விமலா. மகன்கள் தமிழ்செல்வன் (8), கார்த்திக் (6).

இவரது மனைவி விமலா வெளியில் சென்று விடவே, ரவி தனது மகன்களுக்கு டீ போட்டு கொடுப்பதற்காக சிலிண்டர் இணைப்புடன் கூடிய அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது அந்த சிலிண்டரில் ஏற்கனவே ஏற்பட்ட கசிவு காரணமாக தீக்குச்சியை பற்ற வைத்ததும் குபீரென்று தீப்பிடித்தது.

ரவி மீதும் பற்றிய தீ , அருகில் ஓடி வந்த மகன்கள் மீதும் பற்றியது. இதில் 3 பேரும் படுகாயம டைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்து படுகாயம் அடைந்த தந்தை, மகன்களை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தக்க நேரத்தில் அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!