மணப்பாறையில் போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

மணப்பாறையில் போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
X

மணப்பாறையில் இன்று போதை பொருட்கள் ஒழிப்பு தின பேரணி நடந்தது.

மணப்பாறையில் இன்று போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று ஜே.சி.ஐ. மணப்பாறை மற்றும் மணவை காவேரி பவுண்டேஷன் இணைந்து நடத்திய போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. நண்பர்கள், பொதுநல அமைப்பு உறுப்பினர்கள், பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள், அரசு அதிகாரிகள்,பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜே.சி.ஐ. மணப்பாறை தலைவர் மற்றும் மணவை காவேரி பவுண்டேஷன் செயலாளர் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.காவல் உதவி கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார்

மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மலைதுரை சிறப்புரையாற்றினார்.விழிப்புணர்வு பேரணி காமராஜர் சிலை அருகில் தொடங்கி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை நடைபெற்றது.

Tags

Next Story
crop opportunities ai agriculture