வையம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகம்

வையம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகம்
X
வையம்பட்டி அருகே நடுப்பட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
வையம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது நடுப்பட்டி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 182 மாணவ மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!