விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்ககோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்ககோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

லால்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்ககோரி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி இன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய பெருங்குடி மக்களோடு இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிராக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story