மணப்பாறை அருகே கோவில் விழா பிரச்சினையில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

மணப்பாறை அருகே கோவில் விழா பிரச்சினையில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்
X
மணப்பாறை அருகே கோவில் விழா தகராறில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள நல்லூர் ஊராட்சித் தலைவராக சின்னக்காளை என்பவர் இருந்து வருகிறார். இவர் பில்லுப்பட்டியில் கோவில் திருவிழா நடத்துவது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பிடாரப்பட்டி அழகர்சாமி, சுப்பையா, தங்கராசுஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன்,உள்ளிட்ட 4 பேருக்கும், சின்னக்காளைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஊராட்சித் தலைவரின் தலையில் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த சின்னக்காளையை மீட்டு அருகில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இதுபோல் சங்கன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சின்னக்காளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!