மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா
X
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப குமார் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகள் முடித்து திரும்பும் வழியில் மருங்காபுரி வடக்கு ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சியில் கிளைக் கழகச் செயலாளர் ஆனந்த் ஏற்பாட்டில் மதிப்பிற்குரிய குமார் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர், மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பரசன் மருங்காபுரி துணை செயலாளர் மகேந்திரன், மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் காவிய கண்ணன் ஐ.டி.விங்க்அன்புராஜ், வெள்ளைச்சாமி, அய்யாக்கண்ணு , ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்