திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேர் கைது

திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேர் கைது
X
திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூர் பிரிவு ரோடு அருகே மதுபாட்டில் விற்கப்படுவதாக மணப்பாறை போலீசாருக் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மது விற்றதாக வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), டி.உடையாபட்டியைச் சேர்ந்த நெல்சன்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதே போல் புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் மதுபாட்டில் விற்றதாக குளவாய்பட்டியைச் சேர்ந்த ராமன் (62), வடக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி (39 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!