திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்
X
திருச்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டுபாதுகாப்புக்கு சென்று விட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கடலூருக்கு திரும்பினார். அவருக்கு பின்னால் பாதுகாப்புக்குசெல்லும் அதிவிரைவுப்படை வீரர்களும் சென்றனர்.அப்போது அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர்வந்த வேன் மதுரை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருங்காபுரி கல்லுப்பட்டி அடுத்த ஆண்டிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது டிரைவரின்கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம்சென்ற துவரங்குறிச்சி போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாலசுப்ரமணியன் (வயது34), ராம்குமார் (வயது27) ஆகிய 2 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!