ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு

ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபொய்கைப்பட்டி அருகே ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 22 மயில்கள் மர்மமான முறையில் இன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பின்னர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மயில்கள் விஷம் வைத்துக்கொல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களிலும் அதிக அளவில் மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் முறையான நடவடிக்கை எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக இருந்து வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு மயில்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil