திருச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை : போதை ஆசாமி வெறிச் செயல்

திருச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை : போதை ஆசாமி வெறிச் செயல்
X

பைல் படம்

திருச்சி அருகே சமயபுரத்தில் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போதை ஆசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை கிராமத்தில் உள்ள ராசையன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(50) இவர் கட்டில் பின்னும் கூலி தொழில் செய்து வருகிறார்.இவரின் பின்புறம் உள்ள வீட்டில் வசிப்பவர் வேலுச்சாமி மகன் தியாகு(27) திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

வசதிபடைத்த தியாகு தன் பக்கத்து வீடான பாலகிருஷ்ணன் வசதித்து வரும் வீட்டை விலைக்கு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் இரவில் மதுபோதையில் வந்த தியாகு பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார் பாலகிருஷ்ணன். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ததனர்..

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தியாகுவை கைது செய்தனர்.

Tags

Next Story