திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் மனைவியின் தலைமுடி அறுப்பு

திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால்  மனைவியின் தலைமுடி அறுப்பு
X

மனைவியின் தலைமுடியை அறுத்ததாக கைது செய்யப்பட்ட பாரத்.

திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் மனைவியின் தலைமுடியை அறுத்ததாக கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நரசிங்க மங்கலத்தைச் சேர்ந்த சிவஞானம்- தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகன் பாரத் (வயது 34). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் சாவித்திரி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சாவித்திரியிடம் வரதட்சணை கேட்டு கணவன், மாமனார் மற்றும் மாமியார் கொடுமை செய்ததாகவும், சாவித்திரியின் தலைமுடியை அரிவாளால் அறுத்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தலையில் காயமடைந்த சாவித்திரி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சாவித்திரியின் மாமனார் மற்றும் மாமியாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்