வாக்காளர் சேர்க்கை சிறப்புமுகாம்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

வாக்காளர் சேர்க்கை சிறப்புமுகாம்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி

வாக்காளர் சேர்க்கை சிறப்புமுகாம் தொடர்பாக திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2022ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், கடந்த 13,14ம் தேதிகளில் ஓட்டுச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. தொடர்ந்து 27,28ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கூடுதலாக வரும் 21,22ம் தேதிகளிலும் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், மாறுதல்கள் செய்ய கூடுதலாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை முகவர்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி