வ.உ.சி. படத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க .சார்பில் மாலை அணிவிப்பு

வ.உ.சி. படத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க .சார்பில் மாலை அணிவிப்பு
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி. படத்திற்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் இன்று காலை சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வஉசி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கி வஉசி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப கிருஷ்ணன், பூனாட்சி, வளர்மதி, எம்.ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ்,மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,செல்வராசு, பரமேஸ்வரி முருகன்,இந்திரா காந்தி,மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட பொருளாளர் சேவியர் , சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்..




Tags

Next Story
ai in future agriculture