திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றன. இன்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கொண்டு ராஜகோபுர உச்சிக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது கோபுரம் மற்றும் கோவிலை சுற்றி நின்ற திரளான பக்தர்கள் மகமாயி மகமாயி என கோஷமிட்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, அறநிலைய துறை ஆணையர் சந்திரசேகரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu