திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா

திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா
X

திருச்சி எம்ஏஎம் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திருச்சி எம். ஏ. எம். பொறியியல் கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார் .

விழாவினை கல்லூரி முதல்வர் டாக்டர் ரவி மாறன் தலைமை ஏற்று நடத்தினார் .இந்த விழாவில் கல்லூரியின் தாளாளர் எம். ஏ. எம். முகமது நிஜாம் மற்றும் சி.இ.ஓ. சாஸ்மினாஸ் நிஜாம் கல்லூரியின் பொருளாளர் பீர் முகமது மற்றும் துணை முதல்வர் நல்லுசாமி கலந்துகொண்டனர்.

இந்த 19வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை பட்டம் 215 பேரும் முதுகலை பட்டம் அறுபத்தி ஒன்பது பேரும் என மொத்தமாக 284 பேர் பட்டம் பெற்றார்கள் . இறுதியாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரவி மாறன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!