மண்ணச்சநல்லூரில் ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

மண்ணச்சநல்லூரில் ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி மாவட்டம் மண்ணச்நல்லூரில் ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேர்மன் ஸ்ரீதர் பேசினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனோ நோய் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மாதவன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனோ தொற்று கிராம பகுதிகளில் வேகமாக பரவி வருவது, அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் முலமாக வீடு வீடாக சென்று அவர்களை பரிசோதனை செய்வது, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது, வீட்டிலேயே தனிமை படுத்தி இருக்க வைப்பது. தொற்று அதிகம் காணப்பட்டால் அந்த கிராமத்திற்கு யாரும் செல்லாமல் தடுப்பு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசணைகள் வழங்கபட்டன.

Tags

Next Story
the future of ai in healthcare