மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்
X

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை தனலெட்சுமி சீனிவாசா கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் ரிப்பன் கட் செய்து திறந்தார். அருகில் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் நகர செயலாாளர் ஜெயபால்,

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கதிரவன் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

தனலெட்சுமி சீனிவாசா கல்வி நிறுவனங்களின் அதிபர் சீனிவாசன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து சீனிவாசன், எம்எல்ஏக்கள் காடுவெடடி தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேன்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில், வி.எ.ஸ்பி.இளங்கோவன், ஒன்றி சேர்மன் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என பிரமுகர்கள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் நகர திமுக செயலாளர் சிவசண்முககுமார். முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் பானுமதி கண்ணன், ஸ்ரீதர், நகர திமுக பொருளாளர் கார்த்திகேயன், ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை எம்எல்ஏ கதிரவன் செய்திருந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!