திருச்சி அரசு சட்டக்கல்லூரி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அரசு சட்டக்கல்லூரி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
X
திருச்சி அரசு சட்டக்கல்லூரி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரி நூலகர் நோய் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் ராஜகுரு (வயது 50) . இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் நூலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். பணிக்குச் செல்ல முடியவில்லையே என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜகுருவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் கொள்ளிடம் போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare