திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டி

திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793  பேர் போட்டி
X
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 216. ஆக 216 பதவியிடங்களுக்கு 890 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 5 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 90 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து 214 பதவியிடங்களுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் 793 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் உள்ளனர்.



Tags

Next Story