திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகார பூஜைக்காக குவிந்த பக்தர்கள்

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகார பூஜைக்காக குவிந்த பக்தர்கள்
X

திருப்பைஞ்சீலி நீலி வனநாதர் கோயிலில் பக்தர்கள் பரிகாரபூஜை நடத்தினர்.

Thiruppainjeeli-திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகார பூஜைக்காக பக்தர்கள் குவிந்தனர்.

Thiruppainjeeli-திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இக்கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கும், இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் கோவில் நடை சாத்தப்படும் என்பதால் நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்வதற்காகவும், எமனை தரிசனம் செய்வதற்காகவும் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து சாமியை வழிபட்டு சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!