ஸ்ரீரங்கநாதர் கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை
தைப்பூசத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சீர்வரிசை எடுத்து செல்வது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி, தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர்வரிசை அடங்கிய மங்கல பொருட்கள் ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது.
அதன் பின்னர், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, மேலாளர் உமா, சுந்தர் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர், சீர்வரிசையை சுமந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து சென்றனர். ரங்கநாதர் அங்கு, தங்கை மாரியம்மனுக்கு கொண்டு வரப்பட்ட சீர் வரிசையை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் மங்கள பொருட்கள் மாரியம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனை, தீபாரதனை நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu