திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
பைல் படம்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த பெரியசீலி பகுதியை சேர்ந்தவர் சலேஸ்டேனியேல்ராஜ். இவருக்கும் சமயபுரம் அடுத்துள்ள கொணலையை சேர்ந்த பெல்சியா (வயது 25) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
பெல்சியா மலையடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நவல்பட்டுக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பெல்சியா கொணலை, ஜெஜெநகரில் உள்ள தனது தந்தை சூசை மாணிக்கம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் திடீர் என்று எலி பாஷணத்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரின் வீட்டில் பெல்சியாவின் உயிர் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து தகவலறிந்த சிறுகனூார் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெல்சியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் விஷம் தின்றது தெரிய வந்துள்ளது.
மேலும் திருமணமாகி 3 மாதங்களே ஆனதால் இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu