மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் சாவு: போலீசார் விசாரணை

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் சாவு: போலீசார் விசாரணை
X
பைல் படம்.
மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மங்களமேடு என்.புதூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 17). இவர், அரசு நிலைப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சமீபத்தில் பெய்த மழையால் அதே பகுதியில் உள்ள எசனஉடை குளத்தில் நீர் நிரம்பி இருந்ததால் அதில் பிரகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி பிரகாசை மீட்டனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மணப்பாறை போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!